வைஷாலி-ஹம்பி 'டிரா'

புனே: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 தொடர் முடிந்த நிலையில் ரஷ்யாவில் அலெக்சாண்ட்ரா கோர்யச்கினா (308 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் கோனேரு ஹம்பி (161.67) அதிகபட்சம் 6வது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவது தொடர் நேற்று இந்தியாவின் புனேயில் துவங்கியது. இந்தியாவின் வைஷாலி (தமிழகம்), சக வீராங்கனை ஹம்பியை சந்தித்தார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி.
நீண்ட போராட்டத்துக்குப் பின் இப்போட்டி, 53 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஹரிகா, சீனாவின் ஜு ஜினெர் மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 53வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இந்திய வீராங்கனை திவ்யா, பல்கேரியாவின் சலிமோவாவை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் களமிறங்கிய திவ்யா, 53வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். முதல் சுற்று முடிவில் ரஷ்யாவின் போலினா (1.0), திவ்யா (1.0), ஜு ஜினெர் (1.0) 'டாப்-3' இடத்தில் உள்ளனர்.

Advertisement