புது பேருந்து நிலைய பணிக்காக பிராட்வேயில் 55 குடிசை அகற்றம்

பிராட்வே,பிராட்வே பேருந்து நிலையம் 60 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பேருந்து நிலையம், முறையான பராமரிப்பில்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளின்றி படுமோசமாக காட்சியளித்தது. பேருந்துகள் வந்து செல்ல போதிய இடவசதி இல்லாததால், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பேருந்து நிலையத்தை புனரமைக்க வேண்டும் என, பயணியர் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, பிராட்வே பேருந்து நிலையத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது.
பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கும் பணிகள் துவங்க உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாக ராயபுரம் மேம்பாலம் அருகில் 7 கோடி ரூபாய் செலவில், தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பிராட்வே பேருந்து நிலையத்தை இடிக்கும் பணிகளுக்காக, முதற்கட்டமாக சுற்றியிருந்த 55 குடிசைகள் இரு நாள்களாக பொக்லைன் இயந்திரத்தால் அகற்றும் பணிகள் நடக்கின்றன.
அங்கு வசித்த மக்களுக்கு, யானைகவுனி, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
குடிசைகள் அகற்றம் பணிகள் நேற்று முழுமையாக முடிவடைந்தன. அடுத்த வாரம் பிராட்வே பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை அகற்றும் பணிகள் நடைபெறும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
-
அதிருப்தியாளர்களை உற்சாகப்படுத்த வாரிய தலைவர் பதவி: ஸ்டாலின் திட்டம்
-
மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்
-
ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு