பாரில் 'பவுன்சர்கள்' தாக்கியதில் ஐ.டி., பெண் ஊழியர் படுகாயம்
செம்மஞ்சேரி, துரைப்பாக்கத்தை சேர்ந்த 24 வயது பெண், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். விடுமுறைக்கு சென்னை வந்த இவர், நேற்று முன்தினம் இரவு, சோழிங்கநல்லுாரில் உள்ள ஒரு தனியார் பாருக்கு, நண்பர்களுடன் சென்றார்.
அங்கு, அவர் சிகரெட் பிடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு, அங்குள்ள பெண் 'பவுன்சர்' ரம்யா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் ஏற்பட்ட தகராறில், பெண் பவுன்சர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதில், ஐ.டி., பெண் ஊழியருக்கு, முகம், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
செம்மஞ்சேரி போலீசார் முதலில் விசாரித்தபோது, ஐ.டி., பெண் ஊழியர், பெண் பவுன்சர்கள் சேர்ந்து தாக்கியதாகவும், பார் தரப்பில் பார்க்கிங் வளாகத்தில் பெண் தடுக்கி விழுத்ததாகவும் கூறியுள்ளனர்.
போலீசார், பாரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
காரைக்காலில் கிரேன் மோதி முதியவர் பலி
-
தேசிய திறனறி தேர்வில் சாதித்த மரியன்னை பள்ளி
-
கோடை விடுமுறைக்கு கூடுதல் பஸ் இயக்க பயணிகள் எதிர்பார்ப்பு
-
அதிருப்தியாளர்களை உற்சாகப்படுத்த வாரிய தலைவர் பதவி: ஸ்டாலின் திட்டம்
-
மின்சார கட்டணம் உயர்வு? 29ல் கருத்துக் கேட்பு கூட்டம்
-
ஏப்.18 ல் மாவட்ட கிரிக்கெட் அணி தேர்வு