நான்கு மாதங்களாக கழிப்பறைக்கு பூட்டு உபாதை கழிக்க பெண் போலீசார் தவிப்பு

சென்னை, சென்னையில் போக்குவரத்து பெண் காவலர்கள் கவர்னர், முதல்வர், வி.ஐ.பி.,க்கள் செல்லும் சாலைகளில், போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். வெகுநேரம் ஒரே இடத்தில் நிற்கும் அவர்கள், அவசர உபாதைகள் வந்தால், ஒதுங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். நடமாடும் கழிப்பறைகளும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கு நிரந்தர தீர்வு காண, முக்கிய இடங்களில் 'பயோ- டாய்லெட்' வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
சென்னையில் மெரினா உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், ஆடம்ஸ் பாயின்ட், பல்லவன் இல்லம் என, ஐந்து இடங்களில் புதிதாக 'பயோ - டாய்லெட்' வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது தண்ணீர் இன்றி உபயோகப்படுத்த முடியாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளன.
தவிர, புதிதாக, 50 இடங்களில் போலீசார் வசதிக்காக கழிப்பறை வசதி செய்து தரப்பட்டன. அவை அமைக்கப்பட்டு, நான்கு மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வரப்படாமலேயே உள்ளன.
இதனால், போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் தினசரி ஈடுபடும் பெண் காவலர்கள், அவசர உபாதைகளை கழிக்க, மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், புதிதாக அமைக்கப்பட்ட கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெண் காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு