புகார் பெட்டி ..
அகற்றாத கொடி கம்பங்கள்
திருக்கோவிலுார் ஏரிக்கரை, நான்கு முனை மற்றும் ஐந்து முனை சந்திப்பு, பஸ் நிலையம், மற்றும் மணம்பூண்டி மேடு பகுதிகளில் இடையூறாக பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடிகம்பங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு பின்பும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது.
-கிருஷ்ணபிரதாப் சிங், திருக்கோவிலுார்.
தாறுமாறாக நிறத்தப்படும் டூவீலர்கள்
தியாகதுருகம் நகர பகுதியில் வாகன போக்குவரத்து மிகுதியான சென்னை சாலையில் கடைகளின் முன்பு இரு சக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அவ்வப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
-தேவநாதன், தியாகதுருகம்.
பயணியர் நிழற்குடை தேவை
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால் பஸ்சுக்காக காத்திருக்கும் கல்லுாரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-பிரேம், கள்ளக்குறிச்சி.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மகப்பேறு பிரிவு பகுதியில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்புகளால் மருத்துவமனைக்கு சிசிகிச்சைக்கு வருவோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஆனந்தி, கள்ளக்குறிச்சி.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு