மாணவர்கள், பொதுமக்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ் தேசிய பசுமைப் படை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக துணிப்பை வழங்கும் நிகழ்வு நடந்தது.
எலவனாசூர்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கடை வீதியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சாமிதுரை வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் பங்கேற்று பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு துணிப்பை வழங்கினார். தொடர்ந்து ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு