சென்னை - ராஜஸ்தான் சிறப்பு ரயில்களில் 2 கூடுதல் 'ஏசி' பெட்டி

சென்னை, சென்னை சென்ட்ரல் - ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதி நகருக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், பயணியருக்கான தேவை அதிகமாக உள்ளது.

இதையடுத்து, 3ம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் கூடுதலாக இரண்டு 'ஏசி' பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் - பகத் கீ கோதி சிறப்பு ரயிலில் நேற்று முதலும், பகத் கீ கோதி - சென்ட்ரல் சிறப்பு ரயிலில் வரும் 19ம் தேதி முதல் இந்த கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.

Advertisement