மத்திய அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சார்பில் மத்திய பா.ஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
நேஷனல் ெஹரால்டு வழக்கில் அமலாக்க துறை மூலம் காங்., சோனியா, ராகுல் ஆகியோர் மீது பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு பதிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த மத்திய பா.ஜ., அரசை கண்டித்து மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், வீரமுத்து, ஜெயச்சந்திரன், இளையராஜா, துரைராஜ், சரண்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். இதில் மத்திய பா.ஜ., அரசு, அமலாக்க துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். காங்., நகர தலைவர்கள் சிக்கந்தர், ஏழுமலை, நிர்வாகிகள் கிருபானந்தம், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு