19 வரை 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்

சென்னை:சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை:

மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய, தமிழக வட மாவட்டங்களின் மேலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும், 21 வரை தமிழகத்தில் மிதமான மழை தொடரலாம்; 19ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில், வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து, வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement