தேசிய அளவிலான போட்டிகளில் 12 பதக்கம் வென்ற போலீஸ் அணி
சென்னை:தேசிய அளவில், காவல் துறையினருக்காக நடத்தப்பட்ட, பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகளில், தமிழக போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார், 12 பதக்கங்களை வென்றனர்.
கேரள மாநில காவல் துறை சார்பில், 2024 - 2025ம் ஆண்டு காவலர்களுக்கான, தேசிய அளவிலான பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள், ஏப்ரல், 11 - 15ம் தேதி வரை நடந்தன. தமிழக காவல் துறை சார்பில், ஐந்து ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 37 பேர் பங்கேற்றனர்.
தலைமையிடத்து டி.ஜி.பி., வினீத்தேவ் வாங்கடே, கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் ஐ.ஜி., ராஜேஸ்வரி, பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி; டேபிள் டென்னிஸ் போட்டி கலப்பு இரட்டையர் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, தனி நபர் போட்டியில் வெண்கலம் வென்றார்.
பேட்மிண்டன் போட்டியில், மதுரை மாநகர இன்ஸ்பெக்டர் ஹேமலதா, தனி நபர் பிரிவில் தங்கம்; இரட்டையர் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றார்.
தமிழக காவல் துறை அணியினர் இரண்டு தங்கம், ஆறு வெள்ளி, நான்கு வெண்கலம் என, 12 பதக்கங்களை வென்றனர். அவர்களை டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, சான்றிதழ் வழங்கினார்.
மேலும்
-
வீண் விளம்பரத்துக்கு செலவு செய்வதை நிறுத்தி நிர்வாகத்தில் கவனம் செலுத்தவும்: அண்ணாமலை
-
கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம்; இயக்கப்படாத 70 சதவீத தமிழக லாரிகள்
-
ரூ.1,299க்கு 'ஏசி' என ஆன்லைனில் மோசடி; அப்பாவிகள் ஏமாறும் அவலம்
-
பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
-
சூரமங்கலம் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
-
நெல் கொள்முதலில் எடை மோசடி விவசாயிகள் சாலை மறியல்