மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் எம்.எல்.ஏ., நிதியில் வழங்க பரிசீலனை

சென்னை:'எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க, அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது' என, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

அ.தி.மு.க., சுந்தரராஜன்: எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க, நிதி ஒதுக்க முடியாத நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும்.

அமைச்சர் கீதா ஜீவன்: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு, விண்ணப்பித்த அடுத்த மாதமே, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக, 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

வருவாய் துறை சார்பில், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறன் உடையோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 5 லட்சத்து 37,239 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க, நிதி ஒதுக்க அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement