பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி திருவிழா நிறைவு


பசுபதீஸ்வரர் கோவிலில்பங்குனி திருவிழா நிறைவு


கரூர்:கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நேற்று நிறைவு பெற்றது.கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி, சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா, சுவாமி, அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சி, திருக்கல்யாண உற்வசம், தேரோட்டம், தீர்த்தவாரி, ஆளும் பல்லக்கு, ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று இரவு, வெள்ளி வாகனத்தில் ஸ்ரீ சண்டிகேஸ்வரர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து, நேற்றுடன் பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெற்றது.

Advertisement