அரவக்குறிச்சியில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்



அரவக்குறிச்சியில் சாலைமேம்படுத்தும் பணி தீவிரம்

அரவக்குறிச்சி:அரவக்குறிச்சியில் நடந்து வரும், சாலை மேம்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.
ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டம், 2024-25ம், ஆண்டு நிதி திட்டத்தின் கீழ் சாலை சந்திப்புகளை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள முக்கிய சாலை சந்திப்புகளை, மேம்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கரூர் கோட்டம் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட, சின்னதாராபுரத்தில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை குறுகலாக இருந்ததால், அதனை விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள முக்கிய சாலை சந்திப்பை, 2024--25ம் ஆண்டு திட்டத்தின் கீழ், மேம்படுத்தும் பணி நேற்று நடந்தது. இதை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அழகர்சாமி ஆய்வு செய்தார்.
அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Advertisement