மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புசங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்புசங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கரூர்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூர் மாவட்ட மகாகவி மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமையில், கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகையை, தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை விரைவாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட முதன்மை செயலாளர் ஜெயசுதா, செயலாளர் காளிதாஸ், பொருளாளர் தமிழரசி, நிர்வாகிகள் செல்வி, கணேசன், கோகிலா, ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement