கத்தியை காட்டி மிரட்டி மொபைல்,பணம் பறித்த இருவருக்கு காப்பு



கத்தியை காட்டி மிரட்டி மொபைல்,பணம் பறித்த இருவருக்கு காப்பு

அரவக்குறிச்சி:''சிசிடிவி' கேமரா உதவியுடன் பணம், மொபைல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் அருகே தாளப்பட்டியை அடுத்த பள்ளம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 64. இவர் கடந்த 13ம் தேதி கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஜவுளி பூங்கா அருகே உள்ள தனியார் பேக்கரி அருகே, டி.வி.எஸ்., எக்ஸெல் வாகனத்தை நிறுத்திவிட்டு சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக்கில் வந்த இருவர், கத்தியை காட்டி மிரட்டி சக்திவேலிடம் இருந்து, 300 ரூபாய், மொபைல்போனை பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக்திவேல் போலீசில் புகார் அளித்தார். அரவக்குறிச்சி போலீசார் 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, கரூர் மாவட்டம், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிக்கும் கணேஷ் என்பவர் மகன் இன்பரசன், 20, இதே பகுதியில் வசிக்கும் சுரேந்தர் என்பவரின், 17 வயது மகன் ஆகிய இருவரும் கத்தியை காட்டி மிரட்டியது தெரியவந்தது.
உடனடியாக இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மொபைல்போன், 300 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

Advertisement