5 பேர் தாக்கி இருவர் காயம்நான்கு பேர் அதிரடி கைது
5 பேர் தாக்கி இருவர் காயம்நான்கு பேர் அதிரடி கைது
குளித்தலை:குளித்தலை அடுத்த, நச்சலுார் வெள்ளைக்கல்லு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 25. இவரது நண்பர் மந்தையான் பட்டியை சேர்ந்த ரத்தனகிரி என்பவர், கடந்த மாதம் மணல் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.
மணல் திருட்டு சம்பந்தமாக, நங்கவரம் போலீசாருக்கு குழந்தைபட்டி சுப்பிரமணியம், பேரூர் ராஜ்குமார் தான் தகவல் தந்ததாக எண்ணி, மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் பன்னீர்செல்வம், அவரது நண்பர்கள் உப்பாறு கிஷோர், 25, வெள்ளக்கல் நவீன்குமார், 19, உப்பாறு சூரியபிரகாஷ், 20, ஆண்டிப்பட்டி கதிர்வேல், 27, ஆகியோர் சேர்ந்து, சுப்பிரமணியம், ராஜ்குமாரை கள்ளை காளியம்மன் கோவில் விழாவின்போது, தாக்கி காயப்படுத்தியதை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, சூரியபிரகாஷ் மொபைல்போனை சோதித்து பார்த்ததில், 'இன்ஸ்டாகிராமில்' தீராத கணக்கு கள்ளை திருவிழா அன்னைக்கு இருக்கு, ஸ்டார்டிங் பிரண்ட்ஸ் ஒன்றும் பண்ண முடியாது; என்றும் அன்பாய் இருந்து அரவணைக்கவும் தெரியும், வம்பாயிருந்தா தலை எடுக்கவும் தெரியும்' என்று பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
பின்னர், நங்கவரம் போலீசார் பன்னீர்செல்வம், கிஷோர், நவீன் குமார், சூரிய பிரகாஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேலை தேடி வருகின்றனர்.