பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி
பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதிகொலை வழக்கு குற்றவாளி பலி
குளித்தலை: .குளித்தலை அருகே, பைக் மீது டிராவல்ஸ் பஸ் மோதி, கொலை வழக்கு குற்றவாளி இறந்தார்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் கீழ் நந்தவன காடு பகுதியை சேர்ந்தவர் கதிரேசன், 25, விவசாயி. இவர், நேற்று முன்தினம் இரவு சொந்த வேலையாக, பைக்கில் கரூர் சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர்பள்ளி சாந்திவனம் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே சமயபுரம் சென்று விட்டு தனியார் டிராவல்ஸ் பஸ்சில் பக்தர்களுடன், கரூர் சென்று கொண்டிருந்த பஸ், பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கதிரேசன் பலியானார். விபத்தில் பலியான கதிரேசன் மீது, கொலை மற்றும் அடிதடி வழக்குகள் போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையில் உள்ளன.
குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
மேலும்
-
'பிரிவினைவாதத்தை துாண்டுகிறார் முதல்வர்': நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு: தமிழ் மாநில முஸ்லீம் லீக் அறிவிப்பு
-
யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
-
கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,
-
பொது இடத்தில் தகராறு வாலிபர் கைது