மோட்டார் ஒயர் திருட்டு ஊராட்சியில் குடிநீர் 'கட்'

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகளின் குடிநீர் தேவைக்காக, ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

நேற்று காலை, வழக்கம்போல பம்ப் ஆப்பரேட்டர்கள் மோட்டாரை இயக்க வந்த போது, நீர்மூழ்கி மோட்டார்களுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பர் ஒயர்கள் திருடுபோனது தெரியவந்தது. இதனால், அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து வியாசபுரம் ஊராட்சி செயலர் ஜெயபிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement