கோவில் அன்னதான கூடத்திற்கு கம்பளம் அமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோவில் வெளி பிரகார தரையில் உள்ள சூடு காரணமாக, பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்பட்டனர்.
இதையடுத்து பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில்,மூலவர் சன்னிதி மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்திற்கு செல்லும் வெளி பிரகாரத்தின் பாதையில், தேங்காய் நார்கம்பளம் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள்சிரமமின்றி சென்றுவருகின்றனர்.
ஆனால், குளக்கரை வழியாக அரச மரத்தின் கீழ் அமைந்துள்ள நாக சிலைகள் அமைந்துள்ள பகுதிக்கும், அருகில் உள்ள அன்னதான கூடத்திற்கு செல்லும் பாதையிலும் தேங்காய் நார் கம்பளம் அமைக்கப்படவில்லை. இதனால், இவ்வழியாக செல்வோர் தரையில் உள்ள சூடு காரண மாக நடந்து செல்லசிரமப்படுகின்றனர்.
எனவே, கச்சபேஸ்வரர் கோவிலில் அன்னதான கூடத்திற்கு செல்லும் பாதையில், பக்தர்களின் பாதங்களை பாதுகாக்கும் வகையில், தேங்காய் நார் கம்பளம் அமைக்கவேண்டும் என, பக்தர்களிடையே கோரிக்கைஎழுந்துள்ளது.
மேலும்
-
ரோட்டோர மரங்களால் பசுமை இளைஞர் மன்றத்தினர் ஆர்வம்
-
முதல் முறையாக மேனுவல் கியர்பாக்ஸில் பி.எம்.டபிள்யு., இசட்4 எம்40ஐ
-
ஓட்டல்கள், இறைச்சிக் கடைகளில் அடிக்கடி சோதனை அவசியம்; மறுமுறை பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யால்- ஆபத்து
-
மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா ரூ.17 லட்சத்தில் ஹைபிரிட் மாடல்
-
சிட்ரான் 'டார்க் எடிஷன்'
-
'கர்வ்' டார்க் எடிஷன்