மதுபாட்டில் கடத்தியவர் கைது

வானுார் : புதுச்சேரியில் இருந்து காரில் மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்துனர்.
வானுார் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கந்தன் மற்றும் போலீஸ்காரர் ஸ்ரீபன்ராஜ் ஆகியோர் நேற்றுமுன் தினம் நள்ளிரவு திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திருக்கனுார் பகுதியியில் இருந்து வந்த மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 128 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
காரில் வந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை ஆற்காடு சடைய தெருவைச் சேர்ந்த சுரேஷ்பாபு, 49; என்பதும், உறவினரின் திருமண விழாவிற்கு நண்பர்களுக்கு விருந்தளிக்க புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்திச்சென்றது தெரிய வந்தது.
உடன், சுரேஷ்பாபு மீது வழக்குப்பதிந்து கைது செய்து, 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்