ஜிப்மரில் குவிந்த நோயாளிகள் 

புதுச்சேரி : ஜிப்மரில் நீண்ட விடுமுறைக்குப் பிறகு அனைத்து பிரிவுகளும் இயங்கியதால், ஜிப்மர் புற்று நோய் மையம் பிரிவில் நீண்ட வரிசையில் புற நோயாளிகள் காத்திருந்தனர்.

மத்திய அரசு விடுமுறை தினங்களான ஏப்., 10ம் தேதி மகாவீர் ஜெயந்தி, 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் ஆகிய இரு தினங்கள் விடுமுறை. இத்தினங்களுக்கு இடையே வெள்ளி, சனி, ஞாயிறு இருந்தது. அதனால் வெள்ளியைத் தவிர்த்து கடந்த வியாழன் தொடங்கி திங்கள் கிழமை வரை விடுமுறை தினங்கள் அதிகமாக இருந்தன.

விடுமுறைகளுக்கு பிறகு ஜிப்மரில் அனைத்து பிரிவுகளும் நேற்று இயங்கின. அதனால் வழக்கத்தை விட கூடுதலாக மக்கள் குவிந்தனர். புற்றுநோய் மையத்தில், நோயறிதல் மற்றும் ரத்த பரிசோதனை ஆகியவற்றுக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு, நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Advertisement