கடித்து குதறிய குரங்கு சிறுமி, சிறுவன் காயம்
சாணார்பட்டி:திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டி காளியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் காந்தி, 45; கூலி தொழிலாளி. இவரது மகள் கவுசிகா, 6; ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று காலை 11:00 மணிக்கு, தாய் வெள்ளையம்மாளுடன், வேம்பார்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே நடந்து சென்றபோது, அப்பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு, கவுசிகா மீது பாய்ந்து, கடித்து குதறியது. குரங்கை விரட்டிய பொதுமக்கள், சிறுமியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அதே போல, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம், கோட்டை தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி கவுஸ் மகன் முகமது தல்ஹா, 8, என்பவரை துரத்திய குரங்கு, அவரின் காதை கடித்தது. அக்கம்பக்கத்தினர் குரங்கை துரத்தியடித்து சிறுவனை மீட்டனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் சில நாட்களுக்கு முன், மூதாட்டி ஒருவரை குரங்கு கடித்தது. குரங்குகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும்' என்றனர்.
மேலும்
-
புதிய தொழில்நுட்பங்களை தவிர்க்கும் நபரிடம் வீடு கட்டும் பணியை கொடுக்கலாமா?
-
சென்னையில் அதிக பரப்பளவு வீடுகளை மக்கள் விரும்புவது ஏன்?
-
இறுக்கம் குறைந்த மின் இணைப்பில் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு!
-
தனி நில உரிமை இல்லாமல் 'வில்லா' வகை வீடுகள் வாங்காதீர்!
-
குறைவான யு.டி.எஸ்., உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பு குறையும்
-
குஜராத் இடைத்தேர்தலில் ஆம் ஆத்மியை கை கழுவிய காங்கிரஸ்; தனித்து போட்டி என அறிவிப்பு