மாடியில் இருந்து விழுந்த தம்பதி உயிரிழப்பு

நாகர்கோவில்:கன்னியாகுமரி தனியார் லாட்ஜின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து குஜராத்தை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், அம்ரேலியை சேர்ந்த, 30 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற பின், கன்னியாகுமரியில் லாட்ஜில் தங்கியிருந்தனர்.

நேற்று அதிகாலை, இந்த குழுவில் வந்த அனைவரும் சூரிய உதயம் பார்ப்பதற்காக புறப்பட்டு சென்றனர்.

ஆனால், இவர்களில் பபாரியா ஹரிலால் லால்ஜி, 78, அவரது மனைவி பபாரியா ஹன் சப ஹேன் ஹரிலால், 64, துாக்கம் வருவதாக கூறி அறையிலேயே இருந்தனர்.

பின்னர், சூரிய உதயம் பார்க்க செல்லலாம் என முடிவெடுத்த தம்பதி, அறை சாவி இல்லாததால், மாடி அறையின் பின்பக்க ஜன்னல் வழியாக கடந்து, பின்புற பாதைக்கு செல்ல முடிவு செய்தனர்.

இதில், இருவரும் தவறி கீழே விழுந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனர். கன்னியாகுமரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement