முதல்வர் மாநில இளைஞர் விருதுக்குதகுதியானவர் விண்ணப்பிக்க அழைப்பு



நாமக்கல்:'முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு, தகுதியான ஆண், பெண்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில், 'முதல்வர் மாநில இளைஞர் விருது' ஆண்டுதோறும், சுதந்திர தினத்தன்று, 15 முதல், 35 வயது வரை உள்ள, மூன்று ஆண்கள், மூன்று பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


இந்த விருது, ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அதன்படி, 2025ம் ஆண்டிற்கான, 'முதல்வர் மாநில இளைஞர் விருது' வரும், ஆக., 15ல், நடக்கும் சுதந்திர தின விழாவில், தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது.இவ்விருது பெற, 15 முதல், 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 2024 ஏப்., 1ல், 15 வயது நிரம்பியவராகவும், கடந்த மார்ச், 31ல், 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக, தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.
அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பங்கள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில், வரும் மே, 3 மாலை, 4:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement