மதுரைவீரன் கோவிலில் திருவிளக்கு பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

சித்திரை திருவிழாவை யொட்டி, ஸ்ரீ மதுரைவீரன் பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவிலில் கன்யா ரமேஷ், ஆர்.கே., மோட்டார்ஸ் சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத் தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது.

நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பலர் கலந்துகொண்டு, தங்கள் வேண்டுதல் நிறைவேற பூஜை செய்தனர். திருவிளக்கு பூஜை ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் வாசுதேவன் செய்திருந்தார்.

Advertisement