சாக்கடை கழிவுநீர் மூடி சேதம் ரோட்டில் விபத்து அபாயம்
ஆண்டிபட்டி: தேனி மெயின் ரோட்டில் இருந்து சக்கம்பட்டி வழியாக வைகை அணை ரோட்டிற்கு செல்லும் இணைப்பு ரோட்டில் கழிவுநீர் சாக்கடை மூடி சேதமடைந்துள்ளது.
இந்த ரோடு வழியாக எந்நேரமும் வாகனங்கள் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
ரோட்டில் குறுக்காக செல்லும் சாக்கடை பாலத்தில் சேரும் குப்பையை அகற்றுவதற்காக இரும்பிலான மூடியுடன் கூடிய பள்ளம் அமைக்கப்பட்டுள்ளது.
இரும்பிலான மூடியில் வாகனங்கள் தொடர்ந்து சென்றதால் உடைந்து சேதம் அடைந்து விட்டது.
சேதமடைந்த மூடியின் மீது பொதுமக்கள், வாகனங்கள் கவன குறைவாக சென்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த இரும்பிலான மூடியை சீரமைக்க ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement