குடும்ப பிரச்னையில்பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரை பழங்காநத்தம் பசும்பொன்நகர் நாச்சியார்புரம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம் 58. கூலி தொழிலாளி. இவரது மகள் பவித்ராவிற்கும் அதே பகுதியை சேர்ந்த அருணுக்கும் 30, பத்து ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம்நடந்தது.

2 குழந்தைகள் உள்ளனர். பழ வியாபாரம் செய்யும் அருணுக்கு போதிய வருமானம் இல்லாததால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் பவித்ரா பெற்றோர் வீட்டில் உள்ளார். அங்கும் வந்து அருண் அடிக்கடி தகராறில் ஈடுபட்டார். நேற்று இரவு மனைவி, மாமியார் வள்ளிமயில் ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் தகராறு செய்த அருண், தான் கொண்டுவந்த பெட்ரோல் குண்டை வீட்டிற்கு முன் வீசிச் சென்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement