காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், முன்னாள் காங்., தலைவி சோனியா மற்றும் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் ராகுல் எம்.பி., ஆகியோர் மீது, மத்திய அரசு பழிவாங்கும் நோக்கத்தில், அமலாக்கத்துறை, வழக்குப்பதிந்து, குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளதை கண்டித்து, கிழக்கு மாவட்ட, காங்., சார்பில், கிருஷ்ணகிரி தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.


காங்., - எம்.பி., கோபிநாத் தலைமை வகித்து பேசினார். இதில், மாவட்ட காங்., துணைத்தலைவர் ரகமத்துல்லா, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாநில பொதுச் செயலாளர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்ட தலைவர் ஜேசு துரைராஜ், மாவட்ட துணைத்-தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement