12 பவுன் செயின், பணம் திருடிய வாலிபர் கைது

பவானி: பவானியில் 12 பவுன் நகை, பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பவானி, தேவபுரத்தை சேர்ந்தவர் ஜமுனா ராணி, 63: இவர், இதே பகுதியில் குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, இவர் தன்னுடைய வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு, அருகில் உள்ள மளிகை கடைக்கு பால் வாங்க சென்றார்.

பின், வீட்டுக்கு வந்து பார்த்த போது, பீரோ கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதிலிருந்த 12.5 பவுன் தங்க செயின் மற்றும் 20 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர் அளித்த புகார்படி, பவானி

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

பின்னர், அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், இதே பகுதியை சேர்ந்த சசிக்குமார், 36, என்பவர் நகை, பணத்தை திருடியது தெரியவந்தது.
பின், அவரை போலீசார் கைது செய்து, 12.5 பவுன் தங்க செயின், 18 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வேறு ஏதாவது இடங்களில் அவர், திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement