சலுகை பிரியாணியால் 'டிராபிக்'




பள்ளிப்பாளையம்:புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில், சலுகை விலையில் பிரியாணி விற்பனை செய்யப்பட்டது. மக்கள் வாங்க திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாப் பிரிவு சாலை பகுதியில் புதிதாக, நேற்று பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக, ஒரு பிரியாணி வாங்கினால், ஒரு பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், நேற்று மதியம், 1:00 மணிக்கு ஏராளமான மக்கள் பிரியாணி வாங்க திரண்டனர். மேலும், சாலையிலேயே வாகனங்களை நிறுத்தியதால், போக்குவரத்து பாதித்து, வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நின்றன. இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளிப்பாளையம் போலீசார், போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். பின், கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினர். இதனால்
அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement