நகராட்சி வருவாய் ஆய்வாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் சாட்சியம்
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்த வழக்கில் மாநில ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் பொன்னையா ஸ்ரீவில்லி புத்துார் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
ராஜபாளையம்நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்தவர் ராஜேந்திரன் 59. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் 2021ல் ஸ்ரீவில்லிபுத்துார் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். ராஜேந்திரன் மீது வழக்கு தொடர அப்போதைய நகராட்சி நிர்வாக இயக்குனரும், தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை கமிஷனருமான பொன்னையா துறைரீதியான அனுமதி வழங்கியிருந்தார்.
இவ்வழக்கு நேற்று தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பொன்னையா ஐ.ஏ.எஸ்., சாட்சியம் அளித்தார். அவரிடம் எதிர் தரப்பு வழக்கறிஞர் மாரியப்பன் குறுக்கு விசாரணை செய்தார். பின் விசாரணையை மே 15க்கு நீதிபதி வீரணன் ஒத்தி வைத்தார்.
மேலும்
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி