கோடை உழவில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: நன்கு ஆழமாக சட்டி கலப்பை கொண்டு உழும்போது, கீழ் மண் மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும். இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக பரவுவதால், சத்து பற்றாக்குறை குறைய வழி ஏற்படுகிறது. கோடை உழவு செய்வதால், மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு, சூரிய ஒளி மற்றும் வெப்பத்தால் கொல்லப்படும்.
கோடை உழவு செய்யும்போது, மண்ணிலிருந்து வெளிவரும் சிறு பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தித்தின்று அவைகளை அழித்து விடுவதால், அடுத்து சாகுபடி செய்யும் பயிரில், பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப்படுத்த ஏதுவாகின்றது. மறு உழவு செய்யும்போது, களை செடிகள் மடக்கி உழப்பட்டு, மீண்டும் களைகள் வளராமல் தடுப்பதால், செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு