லாரி - ஆட்டோ மோதல் நான்கு பேர் காயம்

ஊத்துக்கோட்டை:நாகலாபுரத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி வந்த ஷேர் ஆட்டோ, தமிழக சோதனைச் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி, ஷேர் ஆட்டோ மீது மோதியது.
இதில் ஷேர் ஆட்டோ சேதம் அடைந்தது. அதை ஓட்டி வந்த, ஊத்துக்கோட்டை முகமது சாதிக், 28 மற்றும் அதில் பயணித்த, ஜோதி, 28, பிரவீன், 30, அசோக், 29 ஆகிய நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள், சிகிச்சைக்காக ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
Advertisement
Advertisement