அரசு பள்ளிக்கு புதியஉணவருந்தும் கூடம்





ஓசூர்:ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, 2வது வார்டில் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 11.90 லட்சம் ரூபாய் சமூக பொறுப்பு நிதியில் புதிதாக கட்டப்பட்ட உணவு அருந்தும் கூடம் திறப்பு விழா நடந்தது.

மாநகராட்சி மேயர் சத்யா கட்டடத்தை திறந்து வைத்தார். துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன், நிலை குழு தலைவர் அசோகா, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

Advertisement