அமலோற்பவம் முன் மழலையர் ஆரம்பப் பள்ளியில் பட்டமளிப்பு விழா

புதுச்சேரி: அமலோற்பவம் முன் மழலையர் பள்ளி, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் அமலோற்பவம் லூர்து அகாடமியில் முன் மழலையர் பள்ளி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியின் மேரிகரோலின் உள்ளரங்கத்தில் நடந்தது.
விழாவிற்கு முதலியார்பேட்டை அன்னை சிவகாமிஅரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முதல்வர் எழில் கல்பனா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின் முன்மழலையர் மாணவர்களுக்கும், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி யு.கே.ஜி., மாணவர்கள், அமலோற்பவம் லூர்து அகாதமியின் யு.கே.ஜி., மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கிப் பேசினார்.
அமலோற்பவம் கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தாளாளர் லூர்துசாமி பேசுகையில், கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையும் தனது உயிர் மூச்சாக கருதி இக்குழுமத்தை நடத்திவருகிறார். கல்லூரியை போல் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவதுதை கண்டு நான் வியக்கிறேன்.
இத்தகைய பள்ளியில் தங்கள் குழந்தைகள் கல்வி பயில வழி வகை செய்த பெற்றோர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் ஆன்டோனியஸ் பிரிட்டோ நன்றி கூறினார்.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!