எம்.ஐ.டி.,கல்லுாரியில் கலாசார விளையாட்டு ஆண்டு விழா

புதுச்சேரி: கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டிகல்லுாரி)யில் ஆண்டு கலாசார மற்றும் விளையாட்டு விழா' இலன் 2025' நடந்தது.
கல்லூரிமுதல்வர் மலர்க்கண் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி குழுமத் தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார்.செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம்ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகை கயாடு லோஹர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.கல்லூரி உடற்கல்வி இயக்குநர் மோகன் மற்றும் விளையாட்டு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த கல்வியாண்டில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகள், கல்லூரி கலாசார குழு தலைவர் வள்ளி தலைமையில் நடந்த பல்வேறு கலாச்சார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் இக்கல்வியாண்டில் தேசியஅளவில் பல்வேறு சாதனைகள் புரிந்த கல்லூரி மாணவர்களுக்கு கல்லுாரி சார்பில் அங்கீகாரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
ஏற்பாடுகளை மணக்குளவிநாயகர் கல்வி குழுமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவன இயக்குனர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர். தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: ஹிந்து பெண்களுக்கு மகளிர் கமிஷன் ஆறுதல்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!