தவளக்குப்பத்தில் வடிகால் அமைக்கும் பணி

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் 46.32 லட்சம் மதிப்பீட்டில், சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.
தவளக்குப்பம் பகுதியில் உள்ள ராமதாஸ் நகர், சடா நகர், எம்.ஜி.ஆர். வீதி, டி.டி. கார்டன் ஆகிய பகுதிகளில், சாலை மற்றும் வடிகால் வசதிகள் இல்லாமல் இருந்தது. தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
அதையடுத்து, எம்.எல்.ஏ., வெங்கடேசன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராமதாஸ் நகருக்கு 25.32 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போல, எம்.ஜி.ஆர். வீதி, டி.டி.கார்டன் ஆகிய பகுதிகளுக்கு ரூ. 21 லட்சம் தொகுதி எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதற்கான பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சரஸ்வதி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், மாவட்ட தலைவர் சுகுமாறன், துணை தலைவர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!