அரசு டில்லி பிரதிநிதி பா.ஜ., தலைவருடன் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் டில்லி பிரதிநிதியான மல்லாடி கிருஷ்ணாராவ், நேற்று டில்லியில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார்.
இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாடி கிருஷ்ணாராவை தொடர்பு கொண்டு கேட்ட போது, ஏனாமில் உள்ள ஜிப்மர் கிளை மருத்துவமனைக்கு உரிய ஊழியர்களை நியமிக்கவும், நர்ஸ், டெக்னீஷியன், உள்ளிட்ட பணிகளுக்கு உள்ளூர் நபர்களை நியமிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினேன்.
மேலும், ஏனாமில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், தற்போது கட்டப்பட்டு வரும் இன்ஜினியரிங் கல்லுாரியை, புற்று நோய் மருத்துவ மனையாக மாற்றவும், அதில், பாரா மெடிக்கல் கல்லுாரி துவங் கவும் கோரினேன்.
பின்னர் சுற்றுலா துறை செயலரை சந்தித்து, ஏனாம் ராஜிவ் பீச் மற்றும் ஏனாம் டவர் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கிட வலியுறுத்தினேன் என்றார்.
இருப்பினும், இவர்களின் சந்திப்பு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!