ஊசுட்டேரி பாரத் பள்ளி ஆண்டு விழா மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

வில்லியனுார்: ஊசுட்டேரி பாரத் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.
முதல் நாள் விழாவிற்கு ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை தாங்கி பொதுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில் சாதனை படைத்தமாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில் சென்னை அக்கார்டு ஹோட்டல் சி.இ.ஓ., வெங்கடேஷ் பட், மேற்கு பகுதி போலீஸ் எஸ்.பி வம்சிதரரெட்டி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பள்ளி தாளாளர் சந்தானகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி முதல்வர் சாந்தி ஜெயசுந்தர் ஆண்டறிக்கை வாசித்தார். பிளஸ் 2 பொதுத்தேர்வில் சாதனைமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
இரண்டாம் நாள் விழாவில் புதுச்சேரி வன உயிரியல் ஆய்வாளர் டாக்டர். பூபேஷ் குப்தா மற்றும் புதுச்சேரி குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை டாக்டர்கள் வெங்கடேஷ், கவிப்பிரியா, சூரியகுமார் ஆகியோர் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளியின் முதல்வர் சாந்திஜெயசுந்தர் நன்றி கூறினார்.
மேலும்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!