குட்கா விற்ற பெண் கைது 

மயிலம்: மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டில் குட்கா பொருட்களை பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் திண்டிவனம் டி.எஸ்.பி.,யின் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கூட்டேரிப்பட்டு பகுதியில் சேதுராமன் மனைவி வள்ளி, 45, என்பவர் நடத்தி வரும் பங்க் கடையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஹான்ஸ் உள்ளிட்ட 163 குட்கா பாக்கெட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின், தனிப்படை போலீசார் வள்ளியை பிடித்து மயிலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

Advertisement