லாட்டரி விற்ற 2 பேர் கைது

மயிலம்: மயிலம் அருகே லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி பகுதியில் உள்ள நயினார் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார், 70; வாணரப் பேட்டை வாசுதேவன், 32; பிள்ளை தோட்டம் கார்த்திகேயன், சென்னை சுந்தரம் ஆகிய நான்கு பேரும் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே ஸ்கூட்டியுடன் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தனர்.

அவ்வழியே ரோந்து சென்ற மயிலம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நால்வரையும் மடக்கி விசாரித்தனர். அப்போது சுந்தரம், கார்த்திகேயன் ஆகியோர் தப்பியோடினர். சிக்கிய விஜயகுமார் மற்றும் வாசுதேவனிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் மயிலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்றது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்த போலீசார் அவர் களிடம் இருந்து நான்கு மொபைல் போன்கள், மூன்று நம்பர் எழுதப்பட்ட சீட்டுகள், ஒரு ஸ்கூட்டி ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement