மாஜி படைவீரர்களுக்கு 21ம் தேதி மருத்துவ முகாம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 21ம் தேதி அரசு மருத்துவமனையில் முன்னாள் படைவீரர்களுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் செய்திக்குறிப்பு :

முன்னாள் படைவீரர் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் காசநோய், மாற்றுத்திறனாளி, மூளை வளர்ச்சி குன்றிய சிறார்கள், புற்றுநோய், பக்கவாதம், கண் பார்வையற்றோர் மற்றும் தொழுநோயால் பாதித்தோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை ஆயுட்கால நிதியுதவி வழங்கப்படுகிறது. இது போன்ற பயனாளிகளை கண்டறிந்து உதவிதொகை வழங்கிட சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

முன்னாள் படைவீரர்கள் அவர்களை சார்ந்தவர்களுக்கான இந்த ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வரும் 21ம் தேதி காலை 7:00 மணிக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் நடக்கவுள்ளது. முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள் பெருமளவில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Advertisement