சங்கமம் லயன்ஸ் சங்கம் 'ருசி' மோர் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பில், கோடை காலத்தையொட்டி, பொது மக்களுக்கு தாகம் தீர்க்க ருசி மோர் வழங்கினர்.

விழுப்புரம் ரயில் நிலைய சந்திப்பில், சங்கமம் லயன்ஸ் சங்கம் சார்பில், பொது மக்களுக்கு ருசி மோர் பாக்கெட்டுகளை வழங்கினர். முன்னாள் சேர்மன் ஜனகராஜ், ருசி மோர் பாக்கெட்டுகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

நகர துணை சேர்மன் சித்திக்அலி, மாவட்ட தலைவர் திலீப்குமார், செந்தில்குமார், புவனேஷ் உள்ளிட்ட லயன் சங்கத்தினர் கலந்துகொண்டு, 1,500 பாக்கெட் ருசி மோரை, பொது மக்களுக்கு வழங்கினர்.

தொடர்ந்து, புதன்கிழமை தோறும், கோடை வெயிலையொட்டி, பொது மக்களுக்கு மோர் வழங்கப்படும்' என்றனர்.

Advertisement