ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

செயலாளர் குருசேகரன் வரவேற்றார். துணை தலைவர்கள் ஜெயராமன், ஞானசேகர், கோவிந்தன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலர் வின்சென்ட் டிபால், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் சடகோபன் உள்ளிட்டோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர். சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.

70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு, 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ படி ரூ.1,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Advertisement