புகார் பெட்டி 

கும்மிருட்டால் மக்கள் அச்சம்



தியாகதுருகம் போலீஸ் நிலையம் உள்ளே செல்லும் வழியில், மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கு மட்டுமின்றி, கேன்டீன் செல்பவர்களும் அச்சமடைகின்றனர்.

ரமேஷ், தியாகதுருகம்.

ஆக்கிரமிப்பால் அவதி



கள்ளக்குறிச்சி நகரில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி பெரும்பாலான தெருக்களும் ஆக்கிரமிப்புகளால் குறுகலாக உள்ளன.

குருபிரசாத், கள்ளக்குறிச்சி

ஆட்டோக்களால் பாதிப்பு



கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் எதிரே மணிக்கூண்டு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதி சாலையோரங்களில் ஸ்டேண்டு அமைத்து, ஆட்டோக்களை வரிசையாக நிறுத்துவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

கமாலுதீன், கள்ளக்குறிச்சி.

உணவின் தரம் ஆய்வு செய்யப்படுமா?



கள்ளக்குறிச்சி ஓட்டல்கள், தள்ளு வண்டிகளில் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கண்மணி, கள்ளக்குறிச்சி

போக்குவரத்து பாதிப்பு



திருக்கோவிலுார்-சந்தைப்பேட்டையில் சாலையோர கடைகளின் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கிருஷ்ணபிரதாப்சிங், மணம்பூண்டி

Advertisement