பைனான்ஸ் ஊழியர்களை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை மிரட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வாணாபுரம் அடுத்த கடுவனுாரை சேர்ந்தவர் மாணிக்கம்,55; இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.2.50 லட்சம், வீட்டு அடமான கடன் பெற்றார். அதன் பிறகு கடன் தொகையை சரி வர கட்டவில்லை. இது தொடர்பாக பைனான்ஸ் ஊழியர்கள் மாணிக்கத்திடம் கடன் தொகையை கட்ட வலியுறுத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணிக்கம் மகன் மணிகண்டன்,35; மதுபோதையில் பைனான்ஸ் அலுவலகம் சென்றார். அங்கு பணிபுரியும் கணக்காளர் மற்றும் பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து

கிளை மேலாளர் ஆறுமுகம், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement