டிரைவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி அடுத்த மோ.வன்னஞ்சூர் புதுகாலனியை சேர்ந்தவர் இளவரசன், 45; டிராக்டர் டிரைவர்.

இவரது மனைவி தாவாயி, 41; இவர்களுக்கு, 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள இளவரசன், நேற்று முன்தினம் இரவு மது வாங்க மனைவியிடம் பணம் கேட்டார்.

அவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் கழிவறையில் இளவரசன் கயிற்றில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement