டில்லி உஷ்ஷ்ஷ்: ‛சிம்பிள்' தமிழச்சி தெலுங்கானாவில் தேறுவாரா?

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தெலுங்கானா காங்கிரஸ் விவகாரங்களைக் கவனிக்க, தீபாதாஸ் முன்ஷி நியமிக்கப்பட்டிருந்தார்; தற்போது இவர் கேரளாவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ராகுல், தனக்கு நெருக்கமானவர்களுக்கு முக்கிய பதவிகளை அளித்து வருகிறார். இப்போது தெலுங்கானா காங்., பொறுப்பாளாராக மீனாட்சி நடராஜனை நியமித்து உள்ளார் ராகுல். 'மீனாட்சி, எந்தவித பந்தாவும் இல்லாமல், வேலை செய்பவர். மிகவும் எளிமையானவர்; அலுவலகத்திற்கு ஆட்டோவில்தான் செல்வார். தமிழச்சியான இவர், மத்திய பிரதேசத்தில் பிறந்தவர். எம்.பி.,யாக பணியாற்றியவர். ஆரம்ப காலத்தில், ஸ்கூட்டரில் தான் அலுவலகத்திற்கு வருவார்' என்கின்றனர் காங்கிரசார்.
'விமான நிலையத்தில் என்னை வரவேற்க யாரும் வர வேண்டாம்; தெலுங்கானா காங்கிரஸ் கட்சியினரும், அமைச்சர்களும் என்னை சந்திக்க வேண்டுமானால் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
இவருக்கு முன் பதவியில் இருந்த தீபா, தெலுங்கானாவில் காங்., ஆட்சி அமைக்க உதவினாலும், இவருக்கு எதிராக பல புகார்கள். இவர் 'ஹைதராபாதில் தங்க தனி பங்களா வேண்டும்' எனக் கேட்டவர். அந்த பங்களாவிற்கான வாடகை பாக்கி, கட்சியை உலுக்கிவிட்டது.
'மீனாட்சியின் நியமனத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டுகொள்ளவே இல்லை. எளிமையானவர் என்பது சரி. ஆனால், முதல்வரை இவர் எப்படி கையாளப்போகிறார்? சீனியர் தலைவர்கள் திக்விஜய் சிங் அல்லது முன்னாள் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் போன்றவர்களை நியமித்திருக்கலாம்' என்கின்றனர் தெலுங்கானா காங்., தொண்டர்கள்.
மேலும்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
-
கள்ளக்காதலுக்கு இடையூறு கணவனை கொன்ற மனைவி கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மெக்கானிக்கை கொன்ற மனைவி கைது