தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் நகர பகுதிகளில், சில நாட்களாக கடும் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.

மக்களின் உடல் சூட்டை தணிக்க, தி.மு.க., சார்பில் ஆங்காங்கே, நீர்மோர் பந்தல் திறந்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை, கிருஷ்ணராயபுரம் நகர, தி.மு.க., சார்பில், பஸ் ஸ்டாப் பகுதியில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது.


நகர செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, நீர்மோர் பந்தலை திறந்துவைத்து மக்களுக்கு நீர்மோர் வழங்கினார். இதில், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., தலைவர் சேதுமணி, மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, வார்டு கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisement