40வது வார்டு பகுதியில் சாக்கடைகால்வாய் வசதி இல்லை

கரூர்:கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, 40-வது வார் டில், இந்திரா நகர், கே.கே.நகரில், 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகள் உருவாகி, 12 ஆண்டுகளாகியும், இங்கு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழை நீர் செல்ல சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை.

இதனால் சாலைகளில் கழிவு நீரை வெளியேற்றுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, கொசு தொல்லை ஏற்படுவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.


இங்குள்ள தெருக்களில் பெரும்பாலான சாலைகள் மண் சாலைகளாகவும், குண்டும், குழியுமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட இப்பகுதியில் தார்ச்சாலை வசதியும், வடிகால் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement